Monday, April 18, 2011

தாய்லாந்தும் தமிழரும்: அன்றும் இன்றும்

'இராஜராஜ சோழன்' என்ற புகழுடன் திகழ்ந்த மாபெரும் தமிழ்ச் சக்கரவர்த்தியானவர் இந்தியா, இலங்கை, தாய்லாந்து (சீயம்), மலேசியா (சீயம்),சிங்கப்புர் (சீயம்), இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தார். சோழர் காலம் சைவமும் தமிழும் தழைத்தோங்கிய மிகமுக்கியமான தமிழரின் வரலாற்றுக் காலமாகும். இக்காலத்தில் தான் திருவெம்பாவை முதலிய 'தமிழ்மறை'கள் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மக்களால் ஓதப்பட்டு வந்தன. மிக முக்கியமாக தாய்லாந்தில் மன்னராக ஒருவருக்கு முடிசுட்டுவிழா நடைபெறும் போது 'திருவெம்பாவை' பாடப்படும் வழக்கம் தற்பொழுதும் உள்ளது. 1950ல் எழுதப்பட்ட கல்கி கிருஸ்ணமூர்த்தியின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் சிலப்பதிகாரம் போன்ற ஐம்பெருங்காப்பியங்களிலும் அதற்கு முந்திய எமது தமிழிலக்கியங்களிலும் பேசப்படும் உணவுமுறை விழாக்கள் முதலியனவற்றை இப்பொழுதும் தாய்லாந்தில் காணக்கூடியதாகவுள்ளது. ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் 'தண்ணீர் விழா' எனும் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பாய்விரித்து தரையிலே அமர்ந்திருந்து பலர் ஒன்றாக கூடி உணவுண்ணும் பழக்கத்தையும் காணலாம். தமிழர் முன்பு கடைப்பிடித்த ஆனால் தற்போது வழக்கொழிந்து போய்விட்டதா பல பழக்கவழக்கங்கள் தாய்லாந்து மக்களால் தற்போதும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக நமது பாரம்பரிய உணவுப்பழக்கம் இங்கு பின்பற்றப்டுகிறது; ஆனால் சீன உணவு முறையை உள்வாங்கியதாக அது காணப்படுகிறது. தற்போது இங்குள்ள மக்களில் 99% ஆனவர்களின் மதம் பௌத்தம். புத்த பகவானின் சிலைகளுக்கு மேலதிகமாக எல்லா பௌத்த ஆலயங்களிலும் இந்துக்கடவுள்களின் உருவங்களும் நிறையவே இடம்பெறுகின்றன. பிரம்மாவின் சிலைகளை மிக அதிகமாக காணலாம். ஆனால் இவர்கள அதனையும் புத்தரின் இன்னுமொரு வடிவமென்கிறார்கள். கிருஸ்ண பகவானை இவர்கள் நாராயணன் என்பதற்குப் பதிலாக 'நாராய்' என்கிறார்கள். மன்னர்களுடைய வாரிசு ஒழுங்கின்படி தாய்லாந்து மன்னர்கள் இராமா-1, இராமா-2, இராமா-3 என்றவாறு அழைக்கப்படுகின்றனர். இந்நாட்டின் பழைய தலைநகரங்களில் ஒன்றின் பெயர் ஆயுத்தியா (அயோத்தி) எனப்படுகிறது. (தொடரும்...) உங்கள் கருத்துக்களை comments பகுதியில் எழுதி அனுப்புங்கள்.